இஸ்ரேல் தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய ஐநா சுகாதார அமைப்பு தலைவர்
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த சனா விமான நிலையத்தில் ஐநா சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்ட குழுவினர் இருந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டெட்ரோஸ் அதானோம் , விமானத்தில் ஏறி புறப்பட தயாராக இருந்தபோது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார். இதில் விமான நிலையத்தின் ஓடுபாதை சேதம் அடைந்ததால் புறப்பட்டு செல்ல தாமதம் ஏற்பட்டதாக குழுவினருடன் கூடிய புகைப் படத்தை பகிர்ந்துள்ளார்.
Comments