மெக்சிகோ சிட்டியில் மிதி வண்டியில் பள்ளிக்கு செல்வதற்கு ஏற்பாடு
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் சிறுவர் சிறுமியர், மிதி வண்டியில் பள்ளிக்கு செல்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு வாகனங்களில் செல்வதை தவிர்த்து மிதி வண்டியில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலை கவசம் அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள், பெற்றோரும் மிதி வண்டி பயணத்திற்கு மாறியுள்ளனர்.
Comments