அதெப்படி ஏரோபிளேன் மோடில் இருந்தால் செல்போன் அழைப்பு வரும் ? மாணவி சொன்ன அந்த சார் யாரு ? புலன் விசாரணையில் அம்பலமாகுமா ?

0 1547

அண்ணா பல்கலைகழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில், தன்னை மிரட்டிய நபருக்கு செல்போன் அழைப்பு வந்ததாகவும், அதில் பேசிய சாருடனும் தன்னை இருக்க சொல்லி மிரட்டியதாகவும் கூறி இருந்த நிலையில்,மிரட்டல் விடுத்தவரின் செல்போன் ஏரோபிளேன் மோடில் இருந்ததாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் தொடர்பாக ஞானசேகர் என்பவரை கைது செய்த போலீசார், அவர் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்

மாணவி தனது புகாரில் ஞானசேகரன் தன்னை மிரட்டிக் கொண்டிருந்த போது அவனது செல்போனுக்கு ஒருவர் அழைத்ததாகவும், அந்த நபரிடம் ,அவளிடம் பேசிக் கொண்டிருப்பதாக கூறிய ஞானசேகரன், தன்னிடம் செல்போனில் பேசிய சாரிடமும் நீ தனிமையில் இருக்க வேண்டும் என்று மிரட்டியதாக கூறி இருந்தார். முதல் தகவல் அறிக்கையிலும் இந்த தகவல் இடம் பெற்று உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் அருண் , மாணவியை ஞானசேகரன் மிரட்டிக் கொண்டிருந்த போது அவனது செல்போன் ஏரோபிளேன் மோடில் இருந்ததாகவும், செல்போனில் ஒருவர் தன்னிடம் பேசுவது போல அவன் நடித்து மிரட்டியதாகவும் தெரிவித்தார்

காவல் ஆணையர் கூறியபடி, செல்போன் ஏரோ பிளேன் மோடில் இருந்தால் செல்போனில் அழைப்பு வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஞானசேகரனின் செல்போன் சிக்னலையும் போலீசாரால் கண்டுபிடித்திருக்க முடியாது என்றும் முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவலும் , காவல் ஆணையரின் விளக்கமும் முரண்பாடாக உள்ளதாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் இந்த வழக்கில் புலன்விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் , எல்லா தகவலையும் வெளியில் சொல்ல இயலாது என்று தெரிவித்த காவல் ஆணையர் அருண், எப்.ஐ.ஆர் வெளியான விவரம் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதால், அடுத்தடுத்த நாட்களில் மேலும் சில உண்மைகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments