''பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் விவரம் பாதுகாக்கப்பட வேண்டும்''-அண்ணாமலை வலியுறுத்தல்

0 458

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால், மாணவியின் விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆரை போலீசார் வேண்டுமென்றே கசிய விட்டிருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தி.மு.க தவறியிருப்பதாகவும், தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடு என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments