அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் சீண்டல்.. போலீசார் விசாரணை..
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இரவு ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை அடையாளம் தெரியாத சிலர் பாலியல் ரீதியாக சீண்டி தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வரும் அந்த மாணவி, தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த இருவர் பாலியல் சீண்டல் செய்ததுடன் மாணவியை ஆடைகள் இல்லாமல் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படும் புகார் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
Comments