பேருந்து நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நேரில் ஆய்வு செய்தார் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன்... பெண் பொறியாளரை கடிந்துகொண்ட ஈஸ்வரன்
திருச்செங்கோடு MLA ஈஸ்வரனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, குமாரமங்கலத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகப் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அங்கு அவர் ஆய்வு மேற்கொண்டார்.
விதிகளின்படி 50 சென்டிமீட்டர் உயரத்துக்கு இருக்கை அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பயணிகளை சிரமப்பட்டு உட்காரும் விதமாக 75 சென்டிமீட்டர் உயரத்துக்கு கட்டப்பட்டிருந்ததால் கோபமடைந்த ஈஸ்வரன்.
விதிகளுக்கு மாறாக நிழற்குடையின் இருக்கை அமைக்கப்பட்டிருப்பதாக எலச்சிபாளையம் ஒன்றிய பொறியாளர் கல்பனாவை கடிந்துகொண்டார்.
Comments