கிருஷ்ணகிரியில் யானை தந்தத்தில் விநாயகர் சிலையை வடித்த நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் யானை தந்தத்தில் விநாயகர் சிலையை வடித்த ரஞ்சித் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவரது வீட்டில் சோதனையிட்டு தந்தத்தால் ஆன விநாயகர் சிலையை பறிமுதல் செய்த வனத்துறையினர், யானை தந்தம் எப்படி கிடைத்தது என விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, யானை தந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை பல்வேறு மாவட்டங்களில் வைத்து வனத்துறையினர் கைது செய்துவருகின்றனர்.
Comments