மத்திய கைலாஷ் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக U -போக்குவரத்து தற்காலிக மாற்றம்
சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீர்வாக சிக்னலுக்கு விடைகொடுத்து போக்குவரத்து காவல்துறை யூ - வடிவ போக்குவரத்து மாற்றத்தை செய்துள்ளது.
அடையாறில் இருந்து கோட்டூர்புரம் - சைதாப்பேட்டை - கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ஓ.எம்.ஆர்ல் சிறிது தூரம் சென்றால் 300 மீட்டர் தொலைவில் ஒரு யூ-வடிவ போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோட்டூர்புரம் - சைதாப்பேட்டை - கிண்டியில் இருந்து ஓ.எம்.ஆர்-ல் செல்ல வேண்டிய வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்க தேவையில்லை.
Comments