ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவல்... பள்ளி நிர்வாகியின் காலில் விழுந்து கெஞ்சிய சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள்
சேலம் பழைய சூரமங்கலத்தில் அரசு உதவி பெறும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவலால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், பள்ளி நிர்வாகியின் காலில் விழுந்து தயவு செய்து பள்ளியை மூட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளியை மூடப்போவதில்லை என்று நிர்வாகிகள் கூறியதை அடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Comments