பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க சென்ற தனிப்படை எஸ்.ஐ.-யை தாக்கிய கும்பல்
பண்ருட்டி அருகில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் என்பவர், பில்லாலி தொட்டி பகுதியில் கஞ்சா விற்பனையை கண்காணிக்க மப்டியில் சென்றுள்ளார்.
அப்போது சிலர் சப் - இன்ஸ்பெக்டரை சுற்றி வளைத்து தாக்கியதாகவும் சிறைப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெல்லிக்குப்பம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அவரை மீட்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் அனந்தகுமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்..
Comments