மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த அண்ணன் தம்பிகள் 3 பேர் மாயம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயில் சகோதரர்கள் மூவர் மூழ்கினர்.
சந்தைதோப்பு பகுதியைச் சேர்ந்த லோகேஷ், விக்ரம், சூர்யா ஆகிய மூவரும் தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, கால்வாயில் லேகேஷ் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரைக் காப்பாற்ற கால்வாயில் குதித்த மற்ற இருவரும் தண்ணீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மூவரையும் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments