தூத்துக்குடியில் மழையால் 70,000 ஏக்கர் பயிர்கள் பெரும் சேதம்.. பயிருக்கு குறைந்த விலை கிடைப்பதால் விவசாயிகள் கவலை
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால், ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 70 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்த உளுந்து, பாசி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பெரும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிப்பில் இருந்து தப்பிய பயிரை அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு சென்றால், மிகக் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுவதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
Comments