கோவை அருகே மக்கள் வசிப்பிடப் பகுதியில் கடமான்கள் தஞ்சம்
கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் அதிகம் வசிக்கக்கூடிய கடமான்கள், வால்பாறை டவுன் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ளன.
புலி, சிறுத்தை, செந்நாய்களுக்குப் பயந்து மக்கள் வசிப்பிடத்துக்கு வந்துள்ள கடமான்களை அப்பகுதியில் உள்ள மக்களும், சுற்றுலாப் பயணிகளும் பார்த்து ரசித்து வருகின்றனர். கடமான்களை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
Comments