அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்
மதுரையில் சிறைகைதியின் மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி சாலையில் வைத்து உதவி ஜெயிலரை , கைதியின் மனைவி செருப்பால் அடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உதவி ஜெயிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து சிறைநிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வார்டன்னா அடிப்போம் என்பது போல மதுரை மத்திய சிறையின் உதவி ஜெயிலர் பாலகுருசாமியை ஒரு பெண் மடக்கிப்பிடித்து அடித்து உதைத்த காட்சிகள் தான் இவை..!
பாலகுருசாமிக்கு விழுந்த அடிகளை கண்டு பரிதாபப்பட்டு பப்ளிக் ஒருவர் உள்ளே புகுந்து தடுக்க முயல அவருக்கும் அடிகள் விழுந்தன
அருகில் நின்ற ஒருவர் உன்கிட்ட எப்படி பழகினேன் இப்படி செஞ்சிட்டியே இன்னும் ரெண்டு போடும்மா என்று அந்த பெண்ணை உசுப்பேற்றிக் கொண்டிருந்தார்
ஒரு கட்டத்தில் செருப்பை எடுத்தும் உதவி ஜெயிலர்மீது விளாசினார் அந்தப்பெண்
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட தனது கணவர் மத்திய சிறையில் கைதியாக இருப்பதாகவும், சிறையில் மனு போட்டு அவரை பார்ப்பதற்காக சென்ற நிலையில் தனது செல்போன் நம்பரை வாங்கி பேசிய பாலகுருசாமி, தனது மகளிடம் தவறாக பேசியதாக கூறி அந்த பெண் பாலகுருசாமி சட்டையை கிழித்ததோடு, தங்கள் உறவினர்கள் உதவியுடன் பாலகுருசாமியை காவல் நிலையத்தில் ஒப்ப்டைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாலகுருசாமி மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து சிறைக் கண்காணிப்பாளர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்
Comments