ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30,000 பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை... ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம் என தாய் கண்ணீர் மல்க கோரிக்கை
சென்னை, சின்னமலை பகுதியில் தாயின் கேன்சர் சிகிச்சைக்காக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணி, விளம்பரங்களை பார்த்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடிய ஆகாஷ் என்ற இளைஞர் ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
தனது சிகிச்சைக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை இழந்ததால் அவரது தாயார் திட்டியதாக கூறப்படும் நிலையில், மொட்டை மாடியில் இருந்த அறையில் டிவி கேபிள் ஒயரால் தூக்கிட்டு ஆகாஷ் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
Comments