ஆழ்வார்குறிச்சி அருகே இருதயராஜ் என்பவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை... காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் ஆய்வு
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே மீன் பாசி குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த இருதயராஜ் என்பவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ஆதரியானூர் பகுதியில் குளத்திற்கு இரவு காவல் இருந்த இருதயராஜை சுற்றி வளைத்து வெட்டிய கும்பல் பிறகு அவர் தலையை தனியாக துண்டித்துள்ளது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். சொத்து பிரச்சனையில் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Comments