பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை 4 பேரை துரத்தி பிடித்த போலீசார்..
திண்டிவனத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை கண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்ற அவர்களை, அரை கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
4 பேரிடம் இருந்து போதை மாத்திரைகள், இருசக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Comments