எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் - மின்வாரியம்
எண்ணூர் அனல் மின் நிலைய திட்டத்திற்கான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அத்திட்டம் தமிழகத்தின் மின் கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.
மரபுசார மின் உற்பத்தி மூலம் அனைத்து நாட்களிலும் மின்சாரம் சீராக கிடைப்பதில்லை எனவும், ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை 10% அதிகரித்து வருவதால் அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் உடன்குடி மற்றும் எண்ணூரில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அந்த வாரியம் தெரிவித்துள்ளது.
Comments