மெக்சிகோ சிறையில் கைதிகளின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்
மெக்சிகோவின் வில்ஹெர்மோசா நகரில் உள்ள சிறையில், தடுப்புகளை உடைத்து நுழைய முயன்ற கைதிகளின் உறவினர்கள் சிறைக் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.
இரு முக்கியத் தீவிரவாதிகளை வேறு சிறைக்கு மாற்றும் நடவடிக்கையின்போது கைதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், 2 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் உயிரிழந்துவிட்டதாகப் பரவிய புரளியால், சிறைவாசிகளின் உறவினர்கள் ஏராளமான அளவில் சிறைக்கு வெளியே குவிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
Comments