ஆன்லைன் லாட்டரி விற்பனை- ஒரே குடும்பத்தினர் 4 பேர் கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில், செந்தில்குமார் லாட்டரி விற்பனைக்காக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. சிறையிலிருந்து வந்ததும் தனது மனைவி, தந்தை மற்றும் சகோதரருடன் சேர்ந்து லாட்டரி விற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
Comments