மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்தை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்களும், அவர்களுக்கு எதிராக பா.ஜ.க கூட்டணி எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.
அப்போது இரு தரப்பினடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பாஜக எம்பிக்கள் பிரதாப் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்தனர். பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்துவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Comments