சர்வதேச திரைப்பட விழா சிறந்த படமாக அமரன் தேர்வு.. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது
சென்னையில் நடைபெற்ற 22 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும், சிறந்த நடிகர் விருது மகாராஜா பட நாயகன் விஜய் சேதுபதிக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷிற்கும், நம்பிக்கை நடிகருக்கான விருது அர்ஜுன் தாஸ்க்கும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வாழை படத்தில் நடித்த பொன் வேலுக்கும் வழங்கப்பட்டது.
கடந்த 12 ஆம் தேதி துவங்கி 8 நாட்கள் நடைபெற்ற விழாவில் தமிழ் திரைப்பட பிரிவில் 25 படங்களும், ஈரான், ஜெர்மன், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் திரையிடப்பட்டன.
Comments