திருக்குறளால் திருவள்ளுவர் உருவம் வரைந்த அரசு நடுநிலைப் பள்ளி மாணவி
விழுப்புரம் மாவட்டம் மேல்களவாய் அரசு நடுநிலைப் பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி பிரதிக்ஷா சுமார் 7 அடி உயரம், 6 அடி அகலம் கொண்ட அட்டையில் 1330 திருக்குறள்களை எழுதி அதன் மூலமாக திருவள்ளுவரின் உருவத்தை வரைந்துள்ளார்.
பெஞ்சல் புயல் காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாமல் ஒரு வாரமாக வீட்டிலிருந்த போது இதனை வரைந்ததாக மாணவி தெரிவித்தார். மாணவி மற்றும் அவரது பெற்றோரை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
Comments