மண் சரிந்ததால் தெப்பக்குளத்தில் லாரி கவிழ்ந்த வீடியோ காட்சி... 2 கிரேன்களின் உதவியுடன் மீட்கப்பட்டது
நாகப்பட்டினம் அருகே ஆழியூரில் தெப்பக்குள கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி ஒன்று, மண் சரிந்ததால் குளத்தில் கவிழ்ந்து விழுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது..
காரைக்காலில் இருந்து சிலிக்கேட் ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி சென்ற லாரியின் ஓட்டுநர் டீ குடிப்பதற்காக அதனை நிறுத்திவிட்டு சென்றபோது குளத்தில் சாய்ந்துள்ளது. இரவு நேரத்தில் லாரியை மீட்க முடியாததால், இன்று காலை இரண்டு கிரேன்கள் மூலம் லாரி மீட்கப்பட்டது.
Comments