நிதி நிறுவன அதிபருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை..
வரி ஏய்ப்பு புகாரில், பழனி அருகே நிதி நிறுவன அதிபருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
சத்திரப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் நடத்திவரும் தனபாக்கியம் நகைக்கடை, வஞ்சியம்மன் பெட்ரோல் பங்க், மற்றும் அவரது வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.
இதில் வங்கி பண பரிவர்த்தனை தொடர்பாக செந்தில்குமாரின் வங்கி லாக்கரை திறந்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.
Comments