ராசிபுரத்தில் பள்ளி மாணவன் ஓட்டிய பைக்கை பறிமுதல் செய்து அபராதம் விதித்த ஆட்சியர்..
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ராசிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, தொப்பப்பட்டி அருகே பள்ளி மாணவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி உனக்கு ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும், மாணவரின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
Comments