மெட்ரோ பணிகளால் மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..
சென்னை போரூர் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் போரூர் - ராமாபுரம் இடையே ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெட்ரோ பணிகள் காரணமாகவும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதாலும் காலை, மாலை வேளைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments