சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்த, ஓட்டுநர் உடல் மீட்பு
சென்னை துறைமுகத்தில் காரை பின்னோக்கி இயக்கியபோது, கடலில் விழுந்த விபத்தில், ஓட்டுநர் முகமது சகியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு அதிகாரியுடன் சென்றபோது காருடன் கடலில் விழுந்த நிலையில், அதிகாரி நீச்சலடித்து வெளியேறினார்.
உடனடியாக காரும் மீட்கப்பட்ட நிலையில், மாயமான ஓட்டுநரை தேடி வந்தனர். 24 மணி நேரத்துக்கு பின் ஓட்டுநரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது.
Comments