யாரோ சிலருக்கு அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்... அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவுக்கு விஜய் கண்டனம்
அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்ததாகக்கூறி த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பெயருக்கு பதில் கடவுள் பெயரை சொன்னால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என மாநிலங்களவையில் அமித் ஷா பேசியிருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர், சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவரும் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை அம்பேத்கர் என தெரிவித்துள்ளார். த.வெ.க.வின் கொள்கைத் தலைவரான அம்பேத்கரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவரது பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
Comments