நகைக்கடை அதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு... வரி ஏய்ப்பு புகாரில் வருமானவரித்துறை சோதனை என தகவல்
வரி ஏய்ப்பு புகாரில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் குழந்தைவேல் - முருகன் சகோதரர்களுக்கு சொந்தமான நகைக்கடை, பெட்ரோல் பங்க் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பழனியில் ராயர் சிட் ஃபண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் நிதி நிறுவனம் நடத்தி வரும் செந்தில்குமார் என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
Comments