ஜி.எஸ்.டி வரி பாக்கியை குறைக்க லஞ்சம் பெற்ற புகாரில் 3 அதிகாரிகள் கைது செய்த சி.பி.ஐ
ஜி.எஸ்.டி வரி பாக்கியை குறைக்க லஞ்சம் பெற்ற புகாரில், மதுரை ஜி.எஸ்.டி துணை ஆணையர் சரவணகுமாரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மதுரையில் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் கார்த்திக் என்பவரிடம் நேற்று 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மத்திய கலால் வரித்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள் இருவரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், துணை ஆணையர் சரவணகுமாருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணகுமாரை கைது செய்த சி.பி.ஐ அதிகாரிகள் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்டனர்.
Comments