பிரேசில்லில் கடல் வழியே ஜெட் ஸ்கீ பைக்கில் வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கிய சாண்டா கிளாஸ்
வழக்கமான பனிச்சறுக்கு வண்டிக்கு பதிலாக, பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனீரோ நகரில் ஜெட் ஸ்கீ எனப்படும் வாட்டர் ஸ்கூட்டரில் கடல் வழியே வந்த சாண்டா கிளாஸ் தாத்தா குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஆட்டிசம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார்.
Comments