கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்படுவதாக புகார்
தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடி வழியாக இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு தமிழக எல்லையில் கொட்டப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து அங்கு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உயர் கோபுரங்கள், சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பும், அவ்வழியாக வரும் வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியதாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Comments