பை.. பைக்குள்ள பை.. எத்தனை பை..? திருட்டு சுந்தரியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த பெண் பயணிகள்..! அரசு பேருந்தில் தரமான சம்பவம்
கன்னியாகுமரி அருகே அரசு பேருந்தில் பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்று சிக்கிக் கொண்டதால், தப்பி ஓடியய திருட்டு சுந்தரியை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்து பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர்
ஓடும் பேருந்தில் 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்று கையும் களவுமாக சிக்கிய “திருட்டு சுந்தரி” இவர் தான்..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் நோக்கிச்சென்று கொண்டிருந்த 9A என்ற அரசு பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த போது பால்பண்ணை பகுதியில் வைத்து சுடிதார் அணிந்த பெண் ஒருவர் பேருந்தில் ஏறி உள்ளார்
கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர், பெண் பயணி ஒருவரின் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் நகையை பறித்துள்ளார், சுதாகரித்துக் கொண்ட அந்த பயணி உடனடியாக தனது செயினை பறித்த பெண்ணின் கையை பிடித்ததாக கூறப்படுகின்றது. கையை தட்டிவிட்டு ஓடும் பேருந்தில் இருந்து தங்க சங்கிலியுடன் குதித்து தப்பிய பெண்ணை பேருந்தை நிறுத்திய பயணிகள் சிலர் விரட்டிச்சென்று பிடித்து மீண்டும் பேருந்தில் ஏற்றி சிறைவைத்தனர்.
அவரிடம் இருந்து ஐந்து பவுன் நகையை மீட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் இது தங்கள் காவல் நிலைய எல்லைக்குள் வராது என்று அந்தப்பெண்ணை அழைத்துச்செல்ல மறுத்தனர். அப்போது அந்த திருட்டு சுந்தரி பேருந்தில் இருந்து இறங்கி தப்பிக்க முயற்சிக்க, அவரை மீண்டும் பேருந்தில் ஏற்றினர்
அந்த பெண்ணின் ஹேண்ட் பேக்கை சோதித்த போது உள்ளே ஏராளமான பைகளை மறைத்து வைத்திருந்ததும், அவற்றில் பணம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது
சிறிது நேரம் கழித்து மற்றொரு காவல் நிலையத்தில் இருந்தும் போலீசார் வந்து விசாரித்து விட்டு, தங்க சங்கிலி பறித்த இடம் வேறு, திருட்டு பெண்ணை பிடித்த இடம் வேறு என்பதால் தங்கள் எல்லைக்குள் வராது என்று கூறிச்சென்றனர்
இதனால் அந்த திருட்டு சுந்தரியுடன் பயணிகள் பேருந்தில் நடுவழியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செய்தியாளர்கள் அங்கு சென்றதும், வடசேரி காவல் நிலையத்தில் இருந்து வந்த பெண் போலீசார் அவரை பேருந்தில் இருந்து இரக்கி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் சுடிதார் போட்ட அந்த திருட்டு சுந்தரி தன்னை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகா என்று பொய்யான பெயர் மற்றும் முகவரியை கொடுத்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் , அவரது பின்னணியை விசாரித்து வருகின்றனர்.
Comments