கருத்து வேறுபாடு காரணமாக பெண் அலுவலரை அலுவலகத்தில் வைத்து பூட்டிச் சென்ற பெண் உதவியாளர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் கிராம நிர்வாக பெண் அலுவலரை, பெண் கிராம உதவியாளர் அலுவலகத்தில் வைத்து பூட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம நிர்வாக அலுவலரான தமிழரசிக்கும், கிராம உதவியாளரான சங்கீதாவுக்கும் சில மாதங்களாகவே பணி தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படும் நிலையில் நேற்று ஆத்திரத்தில் தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டிச் சென்றார்.
Comments