விருதுநகரில் 2000 ஏக்கரிலான பயிர்களை அடித்துச் சென்ற வெள்ளம்.. வாங்கிய கடனை கட்ட வழியில்லை என கதறி அழும் விவசாயி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கஞ்சம்பட்டி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஓடை வழியாக பாய்ந்து மிளகாய், சோளம், மல்லி, வெங்காயம், உளுந்து, கம்பு உள்ளிட்ட பயிர்களை அடித்துச் சென்ற நிலையில், வாங்கிய கடனுக்கு தவணை கட்ட வழியில்லை எனக் கூறி விவசாயிகள் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
கட்டுப்படுத்த முடியாமல் அழுதவரை சக விவசாயிகள் தேற்றினர். இப்பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கூறும் விவசாயிகள், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Comments