தஞ்சாவூரில் அய்யனார் வாய்க்கால் தூர்வாரப்படாததால் தேங்கிய மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அய்யனார் வாய்க்கால் தூர் வாரப்படாததால், விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால், நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வடிகால் வாய்க்காலில் தேங்கிய மழைநீர் மாகாளிபுரத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தினை சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments