சபரிமலை கோவில் மேற்கூரையிலிருந்து நின்று பக்தர் எடுத்த விபரீத முடிவு
சபரிமலை ஐயப்பன் கோவிலிலுள்ள கட்டடம் ஒன்றின் மேற்கூரையிலிருந்து கீழே குதித்து பக்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சக பக்தர்கள் கண்முன்னே கிழே விழுந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்டவர் கர்நாடகாவைச் சேர்ந்த குமாரசாமி என்பது தெரியவந்துள்ளது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments