சென்னையில் போலி அரசுப் பணியாணை வழங்கி லட்சக்கணக்கில் மோசடி
சென்னையில் அரசு பணியாணைகளை போலியாகத் தயாரித்து, பலரிடம் வழங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர்கள் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் பணிபுரியும் டில்லிக்குமார் என்பவரும் அவரது நண்பர் மகேஷ் என்பவரும் இந்து அறநிலையத்துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று அச்சு அசலான போலி பணியாணைகளை வழங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர்.
Comments