ரெட்டை நாக்கு.. நீல கண்கள்.. உடலெல்லாம் விசித்திர டாட்டூ.. இன்ஸ்டா ஏலியன் சிக்கியது எப்படி ? மனித உடலில் மாடிபிகேசனாம்..!
ஏலியனாக மாற போவதாக கூறி ரெட்டை நாக்கு, நீல வர்ண கண்கள், என உடலில் மாற்றங்கள் செய்து இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் பாலோயர்ஸை ஆபத்தான பாதைக்கு அழைத்துச்சென்றதாக டாட்டூ கலைஞர் திருச்சியில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்
கார்.. பைக்.. வரிசையில் மனித உடலில் விபரீதமாக மாடிஃபிகேஷன் செய்வதை.. தற்போதைய நாகரீகமாக மாற்ற தமிழகத்தில் சிலர் முயற்சித்து வருகின்றனர்..
அந்தவகையில் தான் ஏலியன் போல மாறப்போவதாக கூறி, நாக்கை இரண்டாக வெட்டி பாம்பு போல சுழட்டும் இவர் தான் திருச்சி சிந்தாமணி கடைவீதியை சேர்ந்த ஹரிஹரன்
சிகை அலங்காரத்தை சுருள்முடியாகவும், கண்களில் ஊசி செலுத்தி நீல வர்ணமாகவும், நாக்கை ரெண்டாக பிளந்து பாம்பு போன்ற ரெட்டை நாக்குடனும், பிளாட்டினத்தில் பல் வைத்துக் கொண்டு 1 லட்சம் இன்ஸ்டா அடிமைகளை தனது ஃபாலோயர்ஸ்களாக வைத்துள்ளார் ஹரிஹரன்
அண்மையில் ஒரு இளைஞருக்கு ஹரிஹரனே மருத்துவர் போல நாக்கை வெட்டி இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட தோடு, அந்த வீடியோவை தனது இன்ஸ்டா கிராமிலும் பதிவிட்டிருந்தார்.
ஹரிஹரனை இன்ஸ்டாவில் பள்ளி மாணவர்கள் பலர் பின் பற்றுவதால் அவர்களும் மாடிபிகேசன் என்ற பெயரில் ஏதாவது விபரீதத்தில் சிக்காமல் தடுக்க, ஹரிஹரன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், சுகாதரத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தனர்
இதன் தொடர்ச்சியாக திருச்சி எஸ்.பி வருண்குமார் உத்தரவின் பேரில் திருச்சி கோட்டை போலீசார் ஹரிஹரனையும் அவரது கடை ஊழியரான ஜெயராமன் என்பவரையும் கைது செய்தனர்
முறையான உரிமம் இன்றி டாட்டூ கடை நடத்தியதாக மாநகராட்சி அதிகாரிகள், ஹரிஹரனின் கடையையும் இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர்
உலக நாடுகளில் மாடிஃபிகேஷன் எனற பெயரில் தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டு விசித்திரமாக வாழும் மனிதர்கள் போல ஹரிஹரனும் முயன்றுள்ளார். இதற்காக தான் ஏலியன் போல மாறபோவதாக கூறி அவர் இப்படியான விபரீத சேட்டைகளை செய்து வந்ததாக தெரிவித்த போலீசார், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இவரை போல யாரும் முயற்சித்து பார்க்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Comments