கூகுள் மேப்பை பார்த்து காரில் பயணித்த டாக்டர் தம்பதி - சேற்றில் சிக்கி தவித்த நிலையில் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, தருமபுரியில் இருந்து பழனிக்கு, டாக்டர் தம்பதியர் வந்த கார், சேற்றில் சிக்கியது.
காரை ஓட்டிவந்த பெண்ணின் தம்பி, கூகுளை மேப்பை பார்த்தபடி ஓட்டியபோது, வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலைக்குப் பதிலாக மண் சாலையை காட்டியதால், இந்த விபரீதம் நேரிட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சேற்றில் இறங்கி காரையும் அதில் இருந்தவர்களையும் மீட்டனர்
Comments