கடல்நீரைக் கொண்டு செல்லும் கால்வாயின் சுவர் உடைப்பு ... 3 அலகுகளில் மின் உற்பத்தி பாதிப்பு..
தூத்துக்குடி அனல் நிலையத்தில் கொதிகலன்களை குளிர்விப்பதற்காக கடல் நீரைக் கொண்டு செல்லும் புதிய கால்வாயின் சுவர் உடைந்ததால், 3 அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பழைய கால்வாய்க்குள் கடந்த ஆண்டு சாம்பல் கழிவுகள் அடைத்துக் கொண்டு 5 யூனிட்டுகளிலும் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டதால், 6 மாதங்களுக்கு முன்புதான் 6 அடி உயரத்துக்குப் புதிய கால்வாய் கட்டப்பட்டது.
தற்போது பெய்த கனமழையில் புதிய கால்வாயின் சுவர் ஒரு பக்கம் இடிந்து விழுந்து, மீண்டும் சாம்பல் கழிவு அடைத்துக் கொண்டதால், முதலாவது, 2வது, 3வது அலகுகளில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments