கல்குவாரிக்கு தடைவிதிக்கக்கோரி மக்கள் விடிய, விடிய போராட்டம்..
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தா கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு தடைவிதிக்கக்கோரி கிராம மக்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினர்.
கல்குவாரியால் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி பாளையங்கோட்டை - ஒட்டப்பிடாரம் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 நாட்களுக்கு கல்குவாரி செயல்படாது என தாசில்தார் தெரிவித்த நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூறி கலைந்து சென்றனர்.
Comments