மதுரை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனையில் ரூ.14.30 கோடி மோசடி... கடலூர் மத்திய சிறை சூப்பிரெண்ட் மற்றும் பாளை சிறை கூடுதல் சூப்பிரண்டு மீது வழக்கு
2016- 2021 ஆண்டுகளில் மதுரை மத்திய சிறைக் கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் 14 கோடியே 30 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக பெண் உயர் அதிகாரி உள்பட மூன்று சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் எட்டு வியாபாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலியான பில்கள் தயாரித்து மோசடி செய்ததாக தற்போதைய கடலூர் மத்திய சிறை சூப்பரெண்டு ஊர்மிளா, பாளையங்கோட்டை மத்திய சிறை கூடுதல் சூப்பிரண்டு வசந்த கண்ணன், வேலூர் மத்திய சிறை நிர்வாக அதிகாரி தியாகராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments