அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
16 ஆம் தேதி இராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
17 ஆம் தேதி அன்று நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
18 ஆம் தேதி அன்று,கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
Comments