காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
சென்னை மியாட் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதாக தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தகவல்
இன்று காலை 10.12 மணிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதாக செல்வப்பெருந்தகை தகவல்
நுரையீரல் தொற்று காரணமாக சுமார் 1 மாத காலமாக சென்னை மியாட் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பெற்று வந்தார்
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் இன்று காலை 10.12 மணிக்கு இளங்கோவன் காலமானார்
நுரையீரல் தொற்று மற்றும் மூச்சு திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன் 75ஆவது வயதில் காலமானார்
பெரியாரின் பேரன், ஈ.வெ.கி.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல் முறையாக 1984ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2004ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் இளங்கோவன்
தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவராக இருந்தவர்
கடந்த 2000 ஆவது ஆண்டில் முதல் முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வானார் இளங்கோவன்
2000 முதல் 2002ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் இளங்கோவன்
மத்திய அமைச்சராக இருந்தவர் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மத்திய இணை அமைச்சராக இருந்தவர் இளங்கோவன்
2004 - 2009 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக இருந்தவர் இளங்கோவன்
2014ல் மீண்டும் தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர்
2014ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இளங்கோவன் நீடித்தார்
ஈரோடு கிழக்கு எம்எல்ஏ இளங்கோவன்
கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
மகன் திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் - காரணம் என்ன?
75 வயதான ஈவிகேஎஸ் இளங்கோவன் வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் நல பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தார்
மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு மாதத்திற்கு முன்பாக மியாட் மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரலில் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments