திண்டுக்கல் காமராஜர் நீர்தேக்கம் நிரம்பியது.. வேடிக்கை பார்க்க சென்ற நபர்க்கு நேர்ந்த துயரம்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள காமராஜர் நீர்தேக்கம் கனமழையால் நிரம்பி 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக குடகனாற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
இதனிடையே நீர்த்தேக்கத்தை வேடிக்கை பார்க்க சென்ற பெரியமருது என்ற இளைஞர் குடகனாற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு முட்புதர்களில் சிக்கி இருந்த பெரியமருது உடலை தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்டனர்.
Comments