திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக பெய்த தொடர் கனமழை
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டி விநாயகர் காலனியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழைநீரில் மிதக்கும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வரமுடியாத சூழல் உள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
Comments