பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடரவேண்டும் : முதலமைச்சர்
கேரள சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைக்கம் போராட்ட 100ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கோட்டையத்தில் 8 கோடியே 14 லட்சம் ரூபாயில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்தார்.
தனது உரையை மலையாளத்தில் தொடங்கிய முதலமைச்சர், தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் வெற்றி சமூக நீதியின் வெற்றி என்றார்.
100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறியிருந்தாலும், இன்னும் நாம் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Comments