2ஆம் வகுப்புச் சிறுவனுக்கு கண் கருவிழியில் பாதிப்பு
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கண் வலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2ஆம் வகுப்பு மாணவனின், கண் கருவிழி பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
பள்ளியில் விளையாடும் போது கீழே விழுந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் 8 ஆம் வகுப்பு மாணவன் குச்சியால் கண்ணில் குத்தியதாக தங்கள் மகன் கூறியதாக பெற்றோர் போலீஸில் புகாரளித்துள்ளனர்.
இதுகுறித்து முன்கூட்டியே தகவல் சொல்லாத ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கூறியுள்ளனர்.
Comments